சுவிட்சர்லாந்தில் மாற்றப் பாலினத்தவர்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2023ம் ஆண்டில் இவ்வாறான சம்பவங்கள் அதற்கு முந்தைய ஆண்டை விடவும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் உள்ளிட்ட மாற்றுப் பாலினத்தவர்கள் மீது 305 துன்புறுத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த எண்ணிக்கையானது 2022ம் ஆண்டை விடவும் இரண்டு மடங்காகும் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகளவில் சூரிச்சில் பதிவாகியுள்ளதாக சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.