நாளைய தினம் இலங்கையில் தேசிய துக்க தினம் அனுஸ்டிக்கப்பட உள்ளது.
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரய்சீ உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த காரணத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாளைய தினம் இலங்கையின் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட உள்ளது.
இலங்கை மட்டுமன்றி பாகிஸ்தான் உள்ளிட்ட ஏனைய சில நாடுகளிலும் தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலங்கு வானூர்தி விபத்தில் ஈரானிய ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.