டெஸ்லா நிறுவனத்தின் தலைவரும் டுவிட்டர் (எக்ஸ்) தளத்தின் தலைவருமான எலொன் மஸ்க் இலங்கை விஜயம் செய்ய உள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் அவர் இலங்கை விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பினை ஏற்றுக் கொண்டு அவர் இலங்கை விஜயம் செய்ய உள்ளார்.
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் மாநாடு ஒன்றின்போது ரணில், மஸ்கை சந்தித்து கலந்துரைடியாடியுள்ளார்.
எலொன் மஸ்கின் ஸ்டார் லிங்க் செய்மதி தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திட்டத்தினை ஆரம்பித்து வைப்பதற்காக மஸ்க் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
எவ்வாறனெனினும் எந்த திகதியில் அவர் இலங்கை விஜயம் செய்வார் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.