ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரய்சின் மறைவிற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் இரங்கல் வெளியிட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் இக்னசியோ காசீஸ் இந்த இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
கடந்த வார இறுதியில் இடம் பெற்ற உலங்குவானூர்தி விபத்தில் ஈரானிய ஜனாதிபதியும் வெளிவகார அமைச்சரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரது குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுக் கொள்வதாக அமைச்சர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் ஈரானிய மக்களுக்கும் சுவிஸ் அரசாங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவின் ஏனைய நாடுகளைப் போலவே ஈரானின் செயற்பாடுகள் தொடர்பில் சுவிட்சர்லாந்து கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மனித உரிமை நிலைமைகள் குறித்து இவ்வாறு கடும் விமர்சனங்கள் வெளியிட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு பின்னணியில் ஈரானிய ஜனாதிபதியின் மறைவிற்கு ஐரோப்பாவின் ஒரு சில நாடுகள் இரங்கல் வெளியிட்டுள்ளன. அவ்வாறு இரங்கல் வெளியிட்ட நாடுகளின் வரிசையில் சுவிட்சர்லாந்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.