-0.6 C
Switzerland
Sunday, February 16, 2025

ஈரான் ஜனாதிபதி விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி பற்றிய உண்மைகள்

Must Read

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ராய்சீ பயணம் செய்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் உயிரிழந்துனர்.

விபத்து இடம்பெற்ற கிழக்கு அசர்பைஸான் பகுதியில் நிலவிய பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

பெல் 212 (Bell 212) என்னும் வகையைச் சேர்ந்த உலங்குவானூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வியட்நாம் போரின் போது பயன்படுத்தப்பட்ட இந்த உலங்கு வானூர்தி வகைகள் தற்பொழுது அரசாங்க மற்றும் தனியார் தரப்புகளினால் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த உலங்கு வானூர்தி வகையின் பூர்வீகம் என்ன?

பெல் உலங்குவானூர்திகள் கனடிய இராணுவத்திற்காக 1960களில் கடை கூற்றில் உருவாக்கப்பட்டது.

UH-1 Iroquois எனப்படும் உறங்குவானூர்தியின் மேம்படுத்தப்பட்ட ஓர் உலங்கு வானூர்தியே இந்த பெல் ரக உலங்கு வானூர்திகள் புதிய வடிவமைப்புடன் இரண்டு டர்போ சாஃப்ட் (turboshaft) என்ஜின்களுடன் இந்த புதிய உலங்கு வானூர்திகள் தயாரிக்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டில் முதன்முறையாக இந்த உலங்கு வானூர்தி அறிமுகம் செய்யப்பட்டது.

அமெரிக்காவிலும் கனடாவிலும் இந்த உலங்கு வானூர்தி பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவ தகவல்களின் மூலம் தெரிய வருகின்றது.

இதன் பயன்கள் என்ன

இந்த உலங்கு வானூர்தி உருவானது இராணுவ தேவைகளைப் போன்றே ஏனைய தேவைகளுக்கும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெல் 212 என்ற இந்த உலங்கு வானூர்தியானது அனைத்து வகையிலான சூழ்நிலைகளிலும் பயன்படுத்தக்கூடிய ஓர் உலங்கு வானூர்தியாகும்.

குறிப்பாக மக்களை போக்குவரத்து செய்வதற்கு தீயணைப்பு நடவடிக்கைகள் ஈடுபடுவதற்கு ஆயுதங்களை போக்குவரத்து செய்வதற்கு, சரக்குகளை போக்குவரத்து செய்வதற்கு, இந்த உலங்கு வானூர்தியை பயன்படுத்த முடியும்.

ஈரானில் விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி அரசாங்க அதிகாரிகளை போக்குவரத்து செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஓர் உலங்கு வானூர்தியாகும்.

பெல் உலங்கு வானூர்தி நிறுவனத்தின் அண்மைய உற்பத்தியாக பெல் 412 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பொலிஸ் தேவைகளுக்காக இது பயன்படுத்தப்பட உள்ளது.

மருத்துவ தேவைகள் படையினரை போக்குவரத்து செய்தல் தீயணைப்பு பணிகளில் ஈடுபடுவதற்கு இந்த புதிய வகை உலங்கு வானூர்தி உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றிய விமான போக்குவரத்து பாதுகாப்பு முகவத்தின் சான்றிதழையைப் பெற்றுக் கொண்ட இந்த உலங்கு வானூர்தியில் பணியாளர்கள் உள்ளிட்ட 15 பேர் பயணிக்க முடியும்.

எந்த நிறுவனத்தினால் இந்த உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன

பெல் 212 உலங்கு வானூர்தி ராணுவம் சார அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. ஜப்பானின் கரையோர பாதுகாப்பு பிரிவினர் இதனை பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவின் தீயணைப்பு படையினர் இதனை பயன்படுத்துகின்றனர். தாய்லாந்தின் போலீசார் இதனை பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு உலகின் பல்வேறு நாடுகளில் இந்த உலங்குவானுர்தி பயன்படுத்தப்படுகிறது.

ஈரானில் பத்து  உலங்கு வானூர்திகள் அந்நாட்டு விமான மற்றும் கடற்படையினர் பயன்படுத்தி வருகின்றனர்.

ஈரானிய அரசாங்கம் பெல் மற்றும் அகஸ்டா வகை உலங்கு வானூர்திகளை அதிக அளவில் கொள்வனவு செய்த நாடாக கருதப்படுகின்றது.

விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி எங்கு தயாரிக்கப்பட்டது என்பது பற்றிய சரியான தகவல்கள் வெளிவரவில்லை.

எனினும் இந்த உலங்கு வானூர்தி அமெரிக்கா செம்பிறைச் சங்கத்துடன் தொடர்புடையது என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த உலங்கு வானூர்தி சுமார் 40 முதல் 50 வருடங்கள் பழமையானதாக இருக்கலாம் என நிபுணர்கள் ஊகம் வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே பெல் விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனவா

பெல் 212 ரக விமானம் ஒன்று கடந்த 2023 ஆம் ஆண்டு விபத்துக்குள்ளானது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் கரையோர பகுதியில் இந்த விபத்து இடம் பெற்றது. கடந்த 2018 ஆம் ஆண்டில் ஈரானில் பயன்படுத்தப்பட்ட பெல் 212 விபத்துக்குள்ளாகி நான்கு பேர் உயிரிழந்தனர்.

ஈரானிய விமான போக்குவரத்து சேவை

ஈரானிய விமான சேவையானது 1979ம் ஆண்டு முதல் இராணுவ மற்றும் சிவில் விமான போக்குவரத்து சுவைகளை முன்னெடுத்து வருகின்றது.

உதிரி பாகங்களை நாட்டுக்கு கடத்திக் கொண்டு வந்து சில விமானங்கள் தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அணு ஆயுத சர்ச்சை காரணமாக ஈரான் மீது சில தடைகள் விதிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈரானிய உலங்கு வானூர்தி சேவை PANHA, என்று அழைக்கப்படுகின்றது இந்த விமான சேவை நிறுவனம் பெல் விமானங்களை மீள் உருவாக்கம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி அவ்வாறு மீளுருவாக்கம் செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை.

ஈரானிய அரசாங்கம் சிறந்த வான் போக்குவரத்து கட்டமைப்பை கொண்ட அமைந்துள்ளது.

விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி ஓர் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை என்ற காரணத்தினால் இது சர்வதேச சட்டங்களின் கீழ் கட்டாய விசாரணைக்கு உட்படுத்தப்பட முடியாது.

குறிப்பாக இந்த விபத்து தொடர்பில் வெளிதரப்புகளின் ஒத்துழைப்பை ஈரான் பெற்றுக் கொள்வதற்கான சாத்தியங்கள் மிக அரிது என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு உக்ரேனிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளான போது அதன் கருப்பு பெட்டி பிரான்சுக்கு அனுப்பப்பட்ட போதிலும் தகவல்களை மட்டும் வழங்குமாறு கோரப்பட்டதுடன், ஆய்வுக்கு உட்படுத்த அனுமதிக்கப்படவில்லை.

எனவே இந்த சந்தர்ப்பத்திலும் விமான விபத்து தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்பது சந்தேகமே என நிபுணர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES