சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று நடு வானில் ஏற்பட்ட காற்றக் கொந்தளிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லண்டனிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்த விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது,
போயிங் 777-300ஈ.ஆர். ரக விமானமே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.
காற்று கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்ட விமானம் தாய்லாந்தின் பாங்கொக் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
73 வயதான லண்டன் பிரஜை ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலும் விமானத்தில் பயணம் செய்த பலர் காயமடைந்துள்ளதாகவும், சிலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விமானத்தில் 211 பயணிகளும் 18 விமானப் பணியாளர்களும் பயணம் செய்துள்ளனர்.
11 மணித்தியால பயணத்தின் பின்னர் அந்தமான் கடலுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காற்று கொந்தளிப்பினால் இவ்வாறு நடு வானில் விமானங்களில் மரணங்கள் பதிவாவது மிகவும் அரிது எனத் தெரிவிக்கப்படுகின்றது.