சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உக்ரைன் சமாதான மாநாட்டிற்கு சுமார் நான்காயிரம் சுவிஸ் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் நிட்வால்டன் கான்டனின் புர்ஜென்ஸ்டொக் நட்சத்திர ஹோட்டலில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவதற்கு மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்த வேண்டுமாயின் நாடாளுமன்றின் அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.
எனினும் போதியளவு கால அவகாசம் இல்லாத காரணத்தினால் அமைச்சரவையின் அனுமதியுடன் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
எதிர்வரும் ஜூன் மாதம் 15 மற்றும் 16ம் திகதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.