-0.6 C
Switzerland
Sunday, February 16, 2025

சிங்கப்பூர் விமானத்தின் திகில் அனுபவங்களை பகிரும் பயணிகள்

Must Read

சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று காற்று கொந்தளிப்புக்கு உள்ளாகிய போது பயணிகள் பெரும் திகில் அனுபவத்தை எதிர் நோக்க நேரிட்டது.

இந்த விமான விபத்தில் நபர் ஒருவருக்கு கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்திருந்தனர்.

இதில் ஏழு பேர் படுகாயம் அடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 37 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த வேளை ஏற்பட்ட இந்த திடீர் காற்று கொந்தளிப்பு நிலைமை எவ்வாறு தங்களை பாதித்தது என சில பயணிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் உள்ளிட்ட 229 பேர் பயணித்துள்ளனர்.

போயிங் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றே இவ்வாறு விபத்தில் சிக்கியது.

லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணத்தை மேற்கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட காற்றுக் கொந்தளிப்பு நிலை தாக்கியது.

வியாபார தேவைக்காக நியூசிலாந்துக்கு பயணிக்கும் அன்ட்றூ டேவிஸ் இந்த விபத்து தொடர்பில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

விமானம் மிகவும் சுமூகமான முறையில் பயணித்துக் கொண்டிருந்ததாகவும் எந்த ஒரு கொந்தளிப்பு நிலைமைகளையும் அவதானிக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெற்ற வேளையில் அனேக பயணிகள் தங்களது காலை உணவை எடுத்துக் கொண்டிருந்தனர் என அவர் தெரிவிக்கின்றார்.

தாம் திரைப்படம் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் இருக்கைப் பட்டியை அணியுமாறு சமிக்ஞை கிடைக்கப்பெற்றதும் தாம் உடனடியாக இருக்கைப் பட்டியை அணிந்து கொண்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு இருக்கைப் பட்டி அணிந்து சில நொடிகளில் விமானம் உடைவது போல் ஓர் அனுபவம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.

விமானம் கீழே விழுவது போல் உணர்ந்ததாகவும் அது சில நொடிகள் தான் உணர நேரிட்டாலும் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் பயணிகளின் பாதணிகள், ஐ போன்கள், ஐபேட்கள், போர்வைகள் உணவு பொருட்கள், கப்கள் போன்ற பல்வேறு பொருட்கள் விமானத்தின் அங்கும் இங்கும் பறப்பதனை அவதானிக்க முடிந்ததாக தெரிவித்துள்ளார்.

தனக்கு அருகாமையில் இருந்த நபரின் கோபி கோப் தன் மீது முழுவதுமாக விழுந்ததாகவும் அது விமானத்தின் மேல் பரப்பில் சென்று வந்து விழுந்ததாகவும் தெரிவிக்கின்றார்.

விபத்து இடம்பெற்றதன் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் மூலம் எவ்வாறான ஒரு சேதம் ஏற்பட்டது என்பதை உணர்ந்து கொள்ள முடிவதாக அவர் தெரிவிக்கின்றார்.

தனது பின் இருக்கையில் அமர்ந்திருந்த 73 வயதான கொப் கிச்சன் (Geoff Kitchen) என்பவர் பிரித்தானிய பிரஜை இந்த விபத்தில் உயிரிழந்தார் எனவும் அவருக்கு தேவையான சிகிச்சைகளை அளிப்பதற்கு விமான பணியாளர்களும் பயணிகளும் கடுமையான முயற்சி எடுத்ததாகவும் அந்த முயற்சி பயனளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சுமார் 20 நிமிடங்கள் CPR செய்யப்பட்ட போதும் அவரை உயிருடன் மீட்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும  மற்றுமொருவரின் கயாமடைந்திருந்ததாகவும், அவரது தலையில் இருந்து ரத்தம் சொட்டியதாகவும் மேலும் ஒரு வயோதிபர் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தார் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

விமானம் திடீரென ஆடத் தொடங்கியதாக 28 வயதான டஸ்ட்ரால் அஸ்மீர் என்ற மாணவர் தெரிவிக்கின்றார். இவரும் இந்த விமானத்தில் பயணித்த ஒருவராவார்.

இருக்கை பட்டிகளை அணியாதவர்கள் மேலும் கீழும் வீசி எறியப்பட்டதாக சிலரது தலை பயண பைகளில் மோதி காயமடைந்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

மக்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் எவ்வாறு துலங்குவது என தெரியவில்லை எனவும் இதனால் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து இருந்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, குறித்த பிரித்தானிய பிரஜை இருதய நோயினால் உயிரிழந்திருக்கலாம் எனவும் பிரதே பரிசோதனை நடத்தப்படுவதாகவும் பாங்கொக் விமான நிலையத்தின் பொது முகாமையாளர் தெரிவிக்கின்றார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES