சுவிட்சர்லாந்து உள்ளிட்டு சில நாடுகளில் துருக்களி குற்றவாளி கும்பல் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தாலி, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திட்டமிட்ட அடிப்படையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட 19 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
திட்டமிட்ட குற்றச் செயல்கள், பயங்கரவாத செயற்பாடுகள் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டமைக்காக இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்களிடமிருந்து சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போதைப் பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடனும் இந்த சந்தேக நபர்கள் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.