சுவிட்சர்லாந்தின் சிறைச்சாலை ஒன்றை மூடி விடுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஜூரா கான்டனில் அமைந்துள்ள ப்ருன்ட்ருட் சிறைச்சாலையை இவ்வாறு மூடி விடுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் சித்திரவதைகளுக்கு எதிரான தேசிய ஆணைக்குழு இந்த பரிந்துரையை செய்துள்ளது.
இந்த சிறைச்சாலையின் நிலைமைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமை பிரகடனங்களுகு;கு முரணானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கைதிகள் மோசமாக நடத்தப்படுவதாகவும், கைதிகள் சித்திரவதை செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலையில் போதியளவு பகல் நேர வெளிச்சம் கிடைக்கப் பெறுவதில்லை எனவும் காற்றோட்டம் கிடையாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.