சுவிட்சர்லாந்தில் காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிலும் காப்புறுதிக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அடுத்த 2025ம் ஆண்டிலும் கட்டண அதிகரிப்பு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காப்புறுதிக் கட்டணங்கள் 6 வீதத்தினால் உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சில பிராந்தியங்களில் அடிப்படைக் காப்புறுதிக் கட்டணங்கள் சராசரியாக 10 வீதத்தினால் உயர்த்தப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் காப்புறுதிக் கட்டணங்கள் சராசரியாக 8.7 வீதத்தினால் உயர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தில் சுகாதார செலவுகள் தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்லும் பின்னணியில் இவ்வாறு காப்புறுதி கட்டணங்களில் அதிகரிப்பு பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.