சுவிட்சர்லாந்தில் நிதிசார் மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2023ம் ஆண்டில் அதிகளவான மோசடி சம்பவங்கள் மற்றும் நிதிசார் பிணக்குகள் பதிவாகியுள்ளன.
சுவிட்சர்லாந்து வங்கியியல் குறைகேள் அதிகாரி அலுவலகம் ( Swiss Banking Ombudsman) இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
முதலீடுகளில் ஏற்பட்ட நிதி நட்டங்கள் தொடர்பிலான பல்வேறு பிணக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டில் இவ்வாறான 2360 பிணக்குகள் குறித்து அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது கடந்த ஆண்டை விடவும் 18 வீத அதிகரிப்பாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வங்கிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான பல்வேறு பிணக்குகளுக்கு குறைகேள் அதிகாரி அலுவலகம் தீர்வு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மோசடியாளர்கள் பல்வேறு நூதனமான வழிமுறைகளை பயன்படுத்தி நிதி மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.