சுவிட்சர்லாந்து விமானப் படைக்குச் சொந்தமான விமானங்கள் வீதியில் தரையிறக்கி பயிற்சி நடத்தப்பட உள்ளது.
விமானப் படைக்குச் சொந்தமான F/A-18 என்ற தாக்குதல் விமானங்கள் இவ்வாறு மோட்டார் வாகனங்கள் போக்குவரத்து செய்யும் வீதியில் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
மோட்டார் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் பாதைகள் விமான ஓடு பாதைகளாக பயன்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வோட் கான்டனின் பெய்ரென் மற்றும் அவென்சிஸ் ஆகியனவற்றுக்கு இடையிலான வீதியில் இந்த பயிற்சி நடத்தப்பட உள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் 5ம் திகதி இந்த பயிற்சி நடத்தப்படுவதாகவும் இதனால் குறித்த பாதை 36 மணித்தியாலங்களுக்கு மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த பயிற்சி நடவடிக்கைகளை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான வசதிகள் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.