மெக்ஸிக்கோவில் தேர்தல் பிரச்சார மேடை உடைந்து வீழ்ந்ததில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் மேலும் ஐம்பது பேர் வரையில் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மெக்ஸிக்கோவின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோர்ஜ் அல்வாரிஸ் மேய்னிஸின் தேர்தல் பிரச்சார மேடையே இவ்வாறு உடைந்து வீழ்ந்துள்ளது.
பலத்த காற்று வீசியதனால் இவ்வாறு தேர்தல் பிரச்சார மேடை இடிந்து வீழ்ந்துள்ளதாக மெக்ஸிக்கோவின் தற்போதைய ஜனாதிபதி லுபாஸ் ஒர்பாடர் தெரிவித்துள்ளார்.
மெக்ஸிக்கோவின் வடக்கு மாநிலமான நியுவோ லியோனின் சான் பெட்ரோ கார்ஸா கார்ஸியா நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாம் நலமாக இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்ளுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட வேண்டிது அவசியமானது எனவும் ஜனாதிபதி வேட்பாளர் மேய்னிஸ் தெரிவித்துள்ளார்.