அழுத்தங்களுக்கு உள்ளாகும் சுவிட்சர்லாந்து பணியாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கடந்த பத்தாண்டு காலப் பகுதியில் அழுத்தங்களை எதிர்நோக்கும் சுவிஸ் பணியாளர் எண்ணிக்கை 5 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
சுவிட்சர்லாந்து மத்திய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
2012ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2022ம் ஆண்டில் அழுத்தங்களுக்கு உள்ளாகும் சுவிஸ் பணியாளர் எண்ணிக்கை 18 வீதத்திலிருந்து 23 வீதமாக அதிகரித்துள்ளது.
பணியிடங்களில் பெண்கள் அதிகளவில் அழுத்தங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் சமூக சேவைகள் துறைகளில் பணிசார் அழுத்தங்கள் அதிகளவில் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.