சுவிட்சர்லாந்தில் சூரிச்சில் நாய் கடி சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது கடந்த ஆண்டில் நாய் கடி சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
நாய் கடி சம்பவங்கள் அதிகரிப்பிற்கான விசேட காரணங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
நாய் கடி சம்பவங்கள் மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூரிச்சில் கடந்த 2023ம் ஆண்டில் 1661 நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தெரு நாய்களினால் கடிப்பட்டவர்கள் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.