பபுவா நியூகினியில் பாரியளவிலான மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் தென் பகுதியில் இந்த பாரியளவிலான மண்சரிவு நிலைமை பதிவாகியுள்ளது.
மண்சரிவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
எங்கா மாகாணத்தின் முலிடாகா என்னும் பகுதியைச் சேர்ந்த ஆறு கிராமங்கள் மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் மண்ணில் புதையுண்டிருக்கலாம் எனவும் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வடையக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மீட்புப் படையினர் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.