பாதுகாப்பு செலவு தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நாடாளுமன்றம் இந்த யோசனையை நிராகரித்துள்ளது.
சுவிட்சர்லாந்து இராணுவத்திற்கும், உக்ரைனுக்கும் பதினைந்து பில்லியன் சுவிஸ் பிராங்குகள் நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் பரிந்துரை செய்திருந்தது.
எனினும் இந்த பரிந்துரைக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்க மறுத்துள்ளது.
கடன் வரம்புகளை கருத்திற் கொள்ளாது திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிஸ் இராணுவத்தினை மேம்படுத்துவதற்கும் உக்ரைனில் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்கும் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படவிருந்தது.