இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
மரங்கள் முறிந்து வீழ்ந்தமை, வெள்ளம், பலத்த காற்று, மழை மற்றும் கற்கள் வீழ்ந்தமை உள்ளிட்ட ஏதுக்களினால் இவ்வாறு உயிர் மற்றும் உடமைச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக 11307 குடும்பங்களைச் சேர்ந்த 42604 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
11 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் 3137 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பின் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பின் சில வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.