விமானப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் சிங்கப்பூர் விமான சேவை நிறுவனம் புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.
அண்மையில் சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று காற்று கொந்தளிப்புக்கு உள்ளாகி இருந்தது.
இந்த விபத்தின் போது துரதிஷ்டவசமாக 73 வயதான பிரித்தானிய பிரஜை ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பலர் காயமடைந்திருந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சிங்கப்பூர் விமான சேவை நிறுவனம் விமானங்களில் இருக்கை பட்டி அணிதல் தொடர்பான சமிக்ஞை கொள்கைகளில் மாற்றத்தை அறிமுகம் செய்துள்ளது.
காற்று கொந்தளிப்பு நிலைமைகளின் போது ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்கும் நோக்கில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் இருக்கை பட்டி அணிதல் குறித்த சமிக்ஞை காண்பிக்கப்படும் போது சூடான பானங்கள், உணவு வகைகள் விநியோகம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் விமான சேவை நிறுவனம் இது தொடர்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பயணிகள் மற்றும் விமான பணியாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என சிங்கப்பூர் விமான சேவையை நிறுவனம் தெரிவித்துள்ளது.