தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக பிரான்ஸில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் இந்த தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இறுதி நேரத்தில் இந்தப் போராட்டம் குறித்து அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் இரண்டாவது போக்குவரத்து நெரிசல் மிக்க விமான நிலையமான பாரிஸின் ஓர்ரே விமான நிலையத்தின் 70 வீதமான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஒர்லே விமான நிலையத்தின் விமானப் பயணங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய விமான சேவைகள் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் பிரான்ஸ் வான் பரப்பில் பயணம் செய்யும் ஏனைய விமான சேவைகளுக்கும் இந்த தொழிற்சங்கப் போராட்டம் தாக்கத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.