சுவிட்சர்லாந்தில் இணையவழியிலான கெசினோ சூதாட்ட வருமானம் அதிகரித்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டில் இவ்வாறு கெசினோ சூதாட்ட வருமானங்கள் அதிகரித்துள்ளன.
பதிவு செய்யப்பட்ட சூதாட்ட நிறுவனங்களின் வருமானம் 286 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் என தெரிவிக்கப்படுகின்றது.
இணைய வழியிலான கசினோ சூதாட்டங்களில் வருமானம் பதிவாகியுள்ள அதேவேளை, மரபு ரீதியான பௌதீக சூதாட்ட நிறுவனங்களின் வருமானம் 11 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த 20 ஆண்டு காலப் பகுதியில் சுவிட்சர்லாந்து கெசினா பந்தய நிறுவனங்களினால் எட்டு பில்லியன் சுவிஸ் பிராங்குகள் வரியாக செலுத்தப்பட்டுள்ளன.