அண்மைய நாட்களாக விமானப் பயணிகள் பலரும் காற்று கொந்தளிப்பு குறித்து பேசத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் விமானம் ஒன்றில் காற்றுக் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சில தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளதன.
பதற்றம் அடைய வேண்டாம்
காற்றுக் கொந்தளிப்பு விமான பயணங்களில் போது ஓர் வழமையான நிகழ்வாகும். மேலும் அவை அரிதாக சில நேரங்களில் பாரதூரமான நிலைமைகளாகவும் மாறக்கூடும். எனினும் எதனால் காற்று கொந்தளிப்பு ஏற்படுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் விமானத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது.
காற்றின் சமனிலை பாதிக்கப்படும் நிலைமை காற்று கொந்தளிப்பு எனப்படுகின்றது. வானில் சில பகுதிகளில் வெற்றிடங்கள் நிலவும் போது இவ்வாறு காற்று கொந்தளிப்பு ஏற்படுகின்றது.காற்றின் வேகத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் காற்று கொந்தளிப்பு நிலைமையாகும். பொதுவாக மலைகள், ஜட்ஸ் ஸ்ட்ரீம்ஸ் அல்லது புயல் காற்று போன்ற சந்தர்ப்பங்களில் இவ்வாறு காற்று கொந்தளிப்பு ஏற்படுகின்றது.
காற்று கொந்தளிப்பு நிலைமைகளின் போது விமானம் கீழே விழுவது போல் உணரப்படும்
திடீரென ஏற்படும் இந்த காற்றுக் கொந்தளிப்பு நிலைமையானது விமானம் தரையில் விழுந்து விடுமோ கடலில் விழுந்து விடுமோ என அச்சம் கொள்ளும் அளவிற்கு ஓர் உணர்வை ஏற்படுத்தும்.
எனினும் அவ்வாறு ஓர் நிலைமை உருவாகாது. நாம் இந்த சந்தர்ப்பத்தில் பதற்றம் அடையாமல் இருக்க வேண்டியது அவசியமாகும்.
விமானத்தில் திடீரென ஏற்படும் இந்த மாற்றமானது பயணிகள் விமானத்தின் உட்கூரை பகுதி மீது வீசி எறியப்படும் உணர்வை உருவாக்கும்.
அண்மையில் சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று இவ்வாறு காற்றுக் கொந்தளிப்பு நிலைமைக்கு உள்ளாகியது.
இதன் போது 73 வயதான பிரித்தானிய பிரைஜை ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 30 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர
விமானத்தில் பயணப் பொதிகளை வைக்கும் மேல் பரப்பில் பலரது தலைகள் மோதுண்டு அவர்கள் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டது.
இருக்கை பட்டி இன்றி விமானத்தில் பயணிப்பது ஆபத்தாகலாம்
சிங்கப்பூர் விமான சேவைக்குச் சொந்தமான இந்த விமானம் சில நிமிடங்களில் சுமார் 2000 மீட்டர் அளவில் கீழே விழுந்தது. காற்றுக் கொந்தளிப்பு நிலைமையின் போது இருக்கைப் பட்டிகளை அணியாத பயணிகள் மேலே தூக்கி வீசி எறியப்படும் அபாயம் காணப்படுகின்றது. சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்திலும் இந்த ஆபத்து ஏற்பட்டது
இவ்வாறான எத்தனை காற்றுக் கொந்தளிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன
கடந்த 209 ஆம் ஆண்டு முதல் 201 2022 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க பயணிகள் விமானங்களில் இவ்வாறான 163 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், பயணிகள் மற்றும் பணியார்கள் காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்காவின் நியூ யோர்க் டைம்ஸ் ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
எவ்வாறு நாம் எம்மை பாதுகாத்துக் கொள்வது?
இருக்கை பட்டிகளை அணிந்து கொள்வது மிகவும் அத்தியாவசியமானது. விமானத்தில் உறங்கும் போது கூட இருக்கைப்பட்டிகளை அணிந்து கொள்வது இவ்வாறான காற்று கொந்தளிப்பு நிலைமைகளின் போது பாதுகாப்பாக இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக அமைதியாக இருக்க வேண்டியது அவசியமானது
விமானம் கடலிலோ தரையிலோ வீழ்ந்து விடாது
காலநிலை மாற்றம் காரணமாக அண்மைக்காலமாக காற்று கொந்தளிப்பு சம்பவங்கள் அதிகமாக பதிவாகியுள்ளதாக கூறப்பட்ட போதிலும், இந்த விடயத்தை பூரணமாக உறுதி செய்யக்கூடிய விஞ்ஞான ரீதியான தரவுகள் எதுவும் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே விமானத்தில் பயணம் செய்ய அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது
விமான பயணங்கள் மிகவும் பாதுகாப்பான ஓர் வழிமுறையாகும், எனினும் சில விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் இவ்வாறு காற்று கொந்தளிப்பு போன்ற சம்பவங்கள் பதிவாகின்றன.
தற்பொழுது உலகில் காணப்படும் அதிநவீன தொழில்நுட்பங்களும் சாதனங்களையும் நம்பி நாம் விமானத்தில் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும்.
விமானங்களை செலுத்தும் விமானிகளின் திறமைகள் மீதும் நாம் நம்பிக்கை கொள்ள முடியும் எனவும், இருக்கை பட்டிகளை அணிந்து நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் விமானப் பயணங்களை மேற்கொள்ள முடியும். மகிழ்ச்சியாக பயணம் செய்யுங்கள்.