சுவிட்சர்லாந்து மீது சைபர் தாக்குதல் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் சமாதான மாநாட்டினை இலக்கு வைத்து இவ்வாறு சைபர் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு ரஸ்யாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஜூன் மாதம் 15 மற்றும் 16ம் திகதிகளில் நடைபெறவுள்ள மாநாட்டில் 70 நாடுகள் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரஸ்ய அரசாங்க ஆதரவு சைபர் குற்றவாளிகள் இவ்வாறு தாக்குதல் நடத்த உள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.