சுவிட்சர்லாந்தில் பனிப்பாறை சரிவு மரணங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த குளிர்காலத்தில் சுவிஸ் மலைத் தொடர்களில் பதிவான மரணங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
பனிப்பாறை சரிவு ஆய்வாளர்கள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2023-2024 குளிர்காலப் பகுதியில் பனிப்பாறை சரிவு தொடர்பிலான 23 மரணங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த இருபது ஆண்டுகளாக குளிர்காலத்தில் சராசரியாக 21 மரணங்கள் பதிவாகியுள்ளாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் கடந்த குளிர்காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சராசரியாக பனிப்பாறை சரிவில் சிக்குவோரின் எண்ணிக்கை 220 என்ற போதிலும் கடந்த குளிர்காலத்தில் பனிப்பாறை சரிவில் சிக்கியோரின் 261 ஆக பதிவாகியுள்ளது.