சுவிஸ் மக்கள் அயலவர்களுடன் முரண்பாடு கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
வாழ்ந்து வரும் மக்களில் மூன்றில் ஒரு பகுதி என ஏற்கனவே தங்களது அயலவர்களுடன் முரண்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒலி மாசடைதல், ஆடைகளை உலர்த்தல், வாகனங்களை தரித்து நிறுத்தல் மற்றும் காணிப் பிரச்சினை போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த முரண்பாட்டு நிலைமைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மூன்றில் இரண்டு பகுதியினர் அல்லது 68 வீதமான மக்கள் அயலவர்களுடன் சிறந்த உறவுகளை பேணி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.