இந்திய விமானத்தில் குண்டுப் பீதி காரணமாக பயணிகள் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிக்கவிருந்த விமானம் அவசரமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 5.00 மணிக்கு புறப்படவிருந்த விமானம் இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக இவ்வாறு ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
டில்லி விமான நிலையத்திலிருந்து வரனாசி நோக்கி இந்த விமானம் பயணிக்கவிருந்தது.
எனினும் இதுவரையில் விமானத்தில் சந்தேகத்திற்கு இடமான எந்தவொரு பொருளும் கண்டு பிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாத ஆரம்பத்தில் டில்லி விமான நிலையத்தின் விமானமொன்றில் கழிப்பறையில் குண்டு இருப்பதாக பீதி கிளப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.