வெளிநாட்டு உளவாளிகளை சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் நாடாளுமன்றம், அரசாங்கத்திற்கு இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத புலனாய்வு நடவடிக்கைகளின் மூலம் சுவிட்சர்லாந்து தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடிய நபர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக ரஸ்ய உளவாளிகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை தண்டிப்பதற்கு பதிலாக அவர்களை நாடு கடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் நிலைகொண்டுள்ள ஐந்து முக்கிய ரஸ்ய உளவாளிகளில் ஒருவர் சுவிட்சர்லாந்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.