சுவிட்சர்லாந்து அரசாங்கம் சிரியாவிற்கு சுமார் 60 மில்லியன் பிராங்க் டாலர்களை உதவியாக வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் யுத்தம் காரணமாக சிரியாவில் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்து அரசாங்கம் தொடர்ச்சியாக சிரியா மற்றும் பிராந்திய வலய நாடுகளுக்கு பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்கி வருகின்றது.
அந்த வகையில் மீண்டும் சிரிய மக்களுக்கு உதவிகளை வழங்க உள்ளதாக சுவிட்சர்லாந்து அணிவித்துள்ளது.
இந்த நிதி உதவி தொடர்பில் சுவிட்சர்லாந்து வெளிவகார திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
சிரியாவில் பாரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் இவ்வாறு சுவிட்சர்லாந்து உதவிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.