சுவிட்சர்லாந்தில் மலையேறிகளுக்கு உதவும் நோக்கில் புதிய செயலியொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மலையேறும் பாதைகள் எவ்வளவு பாதுகாப்பானது என்பது குறித்து மதிப்பீடு செய்யப்பட வேண்டுமென சுவிஸ் விபத்து தவிர்ப்பு பேரவை தெரிவித்துள்ளது.
திறன்பேசிகளின் ஊடாக மலையேறிகள் பல்வேறு தகவல்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட உள்ளது.
மலையேறும் போது காணப்படக்கூடிய ஆபத்துக்களை சரியாக தெரிந்து கொள்ளாத காரணத்தினால் விபத்துக்கள் பதிவாகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் ஆண்டு தோறும் மலையேறும் போது ஏற்படும் விபத்துக்கள் காரணமாக சுமார் 50 பேர் வரையில் உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.