ஆப்கானிஸ்தான் பெண் பிள்ளைகளுக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்கப்படும் என சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் வாழும் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் ஆகியோருக்கு சுவிட்சர்லாந்தில் ஏதிலி அந்தஸ்து வழங்கும் திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
இந்த ஏதிலி அந்தஸ்து வழங்கும் நடைமுறையை வாபஸ் பெற்றுக் கொள்வது குறித்து யோசனையொன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
எனினும் இந்த யோசனை சிறிய வாக்கு வித்தியாசத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஏதிலி அந்தஸ்து திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு 92 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் ரத்து செய்வதற்கு 91 வாக்குகள் அளிக்கப்பட்டு இருந்தன, மேலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்பதை குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்து மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Gregor Rutz ஏதிலி அந்தஸ்து வழங்கும் திட்டத்தை ரத்து செய்யும் யோசனையை நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார்.
எவ்வாறு எனினும் இந்த யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியில் பெண்கள் மற்றும் சிறுமியருக்கு பெரும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக பெண்களின் அடிப்படை உரிமைகள் கடுமையாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான ஒரு பின்னணியில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் ஆப்கான் பெண்கள் மற்றும் சிறுமியருக்கு ஏதிலி அந்தஸ்து வழங்கும் நடைமுறையை அறிமுகம் செய்து அமுல்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.