டென்மார்க் நாட்டில் அரசாங்கத்துறையில் பல்வேறு வேலைவாய்ப்புக்கள் காணப்படுவதாக முகநூலில் விளம்பரம் செய்து மோசடி செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இத்தாலியுடன் தொடர்புடைய முகநூல் கணக்கு ஒன்றில் இந்த மோசடி தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நோயாளர் பராமரிப்பாளர்கள், தாதியர், பொதியிடல் பணியாளர்கள், கைத்தொழிற்சாலை பணியாளர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், கட்டுமான பணியாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு வெற்றிடங்கள் நிலவுவதாக இந்த போலி விளரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலவசமாக டென்மார்க் பயணம் செய்ய முடியும் மாதாந்தம் மூன்று லட்சம் ரூபா சம்பளம் கிடைக்கும் எனவும் விளம்பரம்நெதர்லாந்து பயணம் செய்ய முடியும் மாதாந்தம் மூன்று லட்சம் ரூபா சம்பளம் கிடைக்கும் எனவும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
டென்மார்க் போன்ற அபிவிருத்தி அடைந்த நாட்டில் கூடுதல் தொழில் தகமை உடைய இலங்கையர்களுக்கே வாய்ப்புக்கள் வரையறுக்க்பட்டுள்ளதாக அங்கு வாழும் இலங்கையரான மருத்துவர் இந்துனில் விஜரட்ன என்பவர் தெரிவித்துள்ளார்.
முகநூல் விளம்பரத்தை பலர் பார்த்துள்ளதாகவும் நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த பதவி வெற்றிடங்களுக்காக விண்ணப்பம் செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் இந்த விளம்பரம் போலியானது எனவும் இது மோசடியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஓர் போலி செயல் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
டென்மார்க்கில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் அதிகாரபூர்வமாக அடிப்படையில் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
எனவே இவ்வாறான மோசடிகளில் சிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.