விமானப் பயணங்களை மேற்கொள்ளும் போது பயணப் பொதிகள் தொலைவது பயணிகள் எதிர்நோக்கும் முக்கிய சவால்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.
கடந்த காலங்களில் பல நாடுகளில் பயணப் பொதிகள் தொலைவது தொடர்பில் பயணிகள் பெரும் எண்ணிக்கையிலான முறைப்பாடுகளை செய்திருந்தனர்.
எனினும், இந்த கோடை காலத்தில் பயணப் பொதிகள் தொலைவதனை கட்டுப்படுத்த விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விமான சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அதி நவீன தொழில்நுட்பம் மற்றம் ட்ராகிங் சிஸ்டங்கள் மூலமாக எளிதில் பயணப் பொதிகளை கண்டு பிடிக்க முடியும் என விமான சேவை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
விமான சேவை நிறுவனங்களும் விமான நிலையங்களும் கூட்டாக இணைந்து பயணப் பொதிகள் தொலைவதனை தடுக்க விசேட திட்டமொன்றை வகுத்துள்ளன.
விமானப் பயணங்களின் போது பயணிகளின் பயணப் பொதிகளை (baggage ) நான்கு இடங்களில் ட்ராக் செய்ய அல்லது சரியான முறையில் போக்குவரத்து செய்யப்படுகின்றனவா என்பது குறித்து கண்காணிக்கப்பட உள்ளது.
உலகில் இயங்கி வரும் சுமார் 300க்கும் மேற்பட்ட விமான சேவை நிறுவனங்களை உள்ளடக்கிய சர்வதேச விமான போக்குவரத்து ஒன்றியம் (IATA ) புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.
பார்கோட்கள் மூலம் பயணப் பொதிகள் ட்ரக் செய்யப்படுவதாகவும் இவை விமான நிலையங்களில் ஸ்கேன் செய்யப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் பெருந்தொற்றின் பின்னர் 2022ம் ஆண்டு முதல் விமானப் பயணிகளின் பயணப் பொதிகள் காணாமல் போகும் சந்தர்ப்பங்கள் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், பயணப் பொதிகள் தொலைதல், சேதமடைதல் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு வழங்கும் வகையிலான புதிய நடைமுறையை விமான நிலையங்களும் விமான சேவை நிறுவனங்களும் இணைந்து அறிமுகம் செய்துள்ளன.