சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு மாணவர்களின் வகுப்பு கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகங்களில் கற்கும் வெளிநாட்டு மாணவர்களின் வகுப்பு கட்டணங்கள் மூன்று மடங்காக உயர்த்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அதாவது, சுவிஸ் உள்ளூர் மாணவர்கள் செலுத்தும் கட்டணத்தை விடவும் மூன்று மடங்கு வகுப்பு கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான யோசனையொன்று சுவிஸ் அமைச்சரவையில் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த யோசனை சுவிஸ் செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சுவிஸ் மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் வகுப்பு கட்டணங்கள் சம அளவில் அறவீடு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவிஸ் மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கற்கும் போது அந்நாட்டு மாணவர்கள் செலுத்தும் வகுப்பு கட்டணத்திலும் 40 மடங்கு அதிகளவான கட்டணத்தை செலுத்த நேரிடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.