சுவிட்சர்லாந்தில் மக்கள் மத்தியில் உப்பு பயன்பாடு அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் அதிக அளவு கடைகளில் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ததனால் இவ்வாறு கூடுதல் உப்பை நுகர நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுவாக நாள் ஒன்றுக்கு ஐந்து கிராம் அளவிலான உப்பு பயன்படுத்தப்பட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் ஆலோசனை வழங்கியுள்ளது.
எனினும் சுவிட்சர்லாந்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கப்பட்ட அளவை விடவும் 75 வீதம் அதிகளவான உப்பினை நுகர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் சராசரியாக பெண் ஒருவர் நாள் ஒன்றுக்கு 7.4 கிராம் எடையுடைய உப்பினை நுகர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்து உணவு பாதுகாப்பு மற்றும் மிருக வைத்திய அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
45 முதல் 59 வயது வரையிலான ஆண்கள் சராசரியாக 11 கிராம் எடையுடைய உப்பினை நுகர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெரும்பான்மையானவர்கள் உணவிற்கு மேலதிகமாக உப்பினை சேர்த்துக் கொள்வதில்லை எனவும் மிக அரிதாக சில வேலைகளில் உப்பினை சேர்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
என்னிடம் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் மூலம் அதிக அளவு உப்பு நுகரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் அதிகளவு உப்பு சேர்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பதப்படுத்தப்பட்ட ஒரு வேளை உணவை உட்கொள்வதன் மூலம் நாளொன்றுக்கு தேவையான மொத்த உப்பு அளவு உடல் நுகர்வதாக தெரிவிக்கப்படுகிறது.