போர் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதனால் சமாதானத்தின் பலன்களை சரியான முறையில் நடைமுறைப்படுத்த முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போரின் பின்னர் ஆட்சி செய்த ஆட்சியாளர்களும் தற்போதைய தலைவர்களும் வடக்கு கிழக்கிற்காக சர்வதேச உதவி வழங்கும் மாநாடு ஒன்றை நடத்த தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்காக சர்வதேச உதவி வழங்கும் மாநாடு ஒன்றை நடத்தி துரித கதியில் மாகாணங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.