நெதர்லாந்தின் சிச்சிபோல் விமான நிலையத்தில் விமான என்ஜின் ஒன்றுக்குள் உள்ளீர்க்கப்பட்டு ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
என்ஜின் இயங்கிக் கொண்டிருந்த வேளையில் அருகாமையில் இருந்த நபர் ஒருவர் உள்ளே இழுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
KL1341 என்ற விமானத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
உயிரிழந்தவரின் ஆள் அடையாள விபரங்களையோ அவர் பயணியா, பணியாளரா அல்லது வேடிக்கை பார்க்கச் சென்றவரா என்பது பற்றிய விபரங்களையோ விமான நிலைய நிர்வாகம் வெளியிடவில்லை.
சிச்சிபோல் விமான நிலையம் ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய விமான நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுளு;ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.