ஹமாஸ் இயக்கத்திற்கு தடை விதிப்பதற்கு சுவிட்சர்லாந்து அரசியல் கட்சிகள் ஆதரவு வெளியிட்டுள்ளன.
ஹமாஸ் இயக்கத்திற்கு தடைவிதிப்பது குறித்து அமைச்சரவை யோசனையொன்றை முன் வைத்துள்ளது.
இந்த யோசனைக்கு பிரதான கட்சிகள் ஆதரவினை வெளியிட்டுள்ளன.
ஹமாஸ் இயக்கத்தை தடை செய்வதுடன் அதனை ஒரு பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஹமாஸ் இயக்கத்திற்கு நிதியீட்டம் செய்வது மற்றும் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பன தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சமாதானத்தை சீர்குலைக்கும் தரப்புகளுக்கு சுவிட்சர்லாந்து அடைக்கலம் வழங்கக் கூடாது என அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டி உள்ளன.
கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஹமாஸ் இயக்கத்தினர், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் – இஸ்ரேல் யுத்தம் மத்திய கிழக்கு நாடுகளில் வியாபித்துள்ளதுடன் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.