சுவிட்சர்லாந்தில் உடல் எடை கூடியோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இரண்டு தசாப்த காலப் பகுதியில் உடல் எடை கூடியவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
நாட்டில் உடல் எடை அதிகரிப்பிற்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 12 வீதமாக பதிவாகியுள்ளது.
1992ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 5 வீதமாக காணப்பட்டது.
55 முதல் 74 வயது வரையிலானவர்களே அதிகளில் உடல் எடை அதிகரிப்புக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுவிஸ் பிறந்தவர்களை விடவும் வெளிநாடுகளில் பிறந்து சுவிஸில் வாழ்பவர்கள் உடற் பருமன் அதிகரிப்பினால் கூடுதலாக பாதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தில் உடல் எடையை குறைப்பதற்காக பிரதானமாக Orlistat மற்றும் Liraglutideஆகிய மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
மருத்துவர்களின் பரிந்துரைக்கு அமைய இந்த மருந்து வகையை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.