அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்றாம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வியாபார அறிக்கைகளை போலியாக தயாரித்துள்ளார் என ட்றாம்ப் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ட்றாம்ப் மீது சுமத்தப்பட் 34 குற்றச்சாட்டுக்களிலும் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது சட்டவிரோத நிதியை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபணமான முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஜூலை மாதம் 11ம் திகதி ட்றாம்பிற்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
ட்றாம்பிற்கு எதிரான 34 குற்றச்சாட்டுக்களிலும் அவர் குற்றவாளி என ஜுரர்கள் சபை தீர்மானித்துள்ளது.
பிரபல ஆபாச நடிகையுடன் ட்றாம்ப் பேணிய தொடர்புகள் குறித்து தேர்தல் காலத்தில் அம்பலப்படுத்துவதனை தடுக்கும் நோக்கில் நடிகைக்கு பணம் வழங்கிய விவகாரம் அம்பலமாகியுள்ளது.
இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களை ட்றாம்ப் மறுத்துள்ளதுடன் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.