சுவிட்சர்லாந்திடம் விடுக்கப்படும் நாடு கடத்தல் கோரிக்கை எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல நாடுகள் நாடு கடத்தல் தொடர்பிலான கோரிக்கைகளை சமர்ப்பித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் மொத்தமாக 430 நாடு கடத்தல் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகளின் கோரிக்கைக்கு அமைவாக கடந்த ஆண்டில் சுமார் 30,000 தேடுதல்கள் சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோன்று சுவிட்சர்லாந்து அரசாங்கம் சுமார் 200 தேடுதல் கோரிக்கைகளை வெளிநாடுகளிடம் சமர்ப்பித்துள்ளது.
48 கைதிகள் நாடு கடத்தப்பட்டதாகவும் 12 கைதிகள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர் துஷ்பியோகத்தில் ஈடுபட்ட ஈக்வேடோர் பிரஜை ஒருவரை சுவிட்சர்லாந்து அதிகாரிகள் வாட் கன்டனில் வைத்து கைது செய்து கடந்த அக்டோபர் மாதம் நாடு கடத்தி இருந்தனர்.
விமான நிலையத்தில் குறித்த நபரை, ஈக்வேடோர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.