ஐரோப்பாவில் நடைபெறும் பிரமாண்டமான பாடல் போட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான யூரோ விஷன் போட்டி சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட உள்ளது.
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு இந்தப் போட்டி சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட உள்ளது.
குறித்த போட்டியை நாட்டின் எந்த நகரில் நடத்துவது என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
போட்டியை நடத்துவதற்கு ஆர்வமுள்ள நகரங்கள் இதற்காக விண்ணப்பம் செய்ய முடியும் என சுவிஸ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இந்த போட்டி ஏற்பாட்டு தொடர்பான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜூன் மாத இறுதி வரையில் போட்டி நடத்துவது தொடர்பில் விண்ணப்பம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை நடைபெற்ற பாடல் போட்டியில் சுவிட்சர்லாந்து வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.