அண்மைய நாட்களாக விமானங்கள் காற்றுக் கொந்தளிப்பு விபத்துக்களில் சிக்கிய சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று, கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று கடந்த வாரங்களில் விபத்துக்களில் சிக்கியிருந்தன.
இந்த விபத்துக்களில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தனர்.
இவ்வாறான பின்னணியில் துருக்கியின் உள்ளூர் விமான சேவையொன்றின் விமானமொன்று காற்றுக் கொந்தளிப்பில் சிக்கியுள்ளது.
இந்த விபத்தில் விமானப் பணிப்பெண் ருவர் காயமடைந்துள்ளார்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரிலிருந்து இஸ்மீர் நகருக்கு பயணம் செய்த விமானமொன்று இவ்வாறு காற்றுக் கொந்தளிப்பில் சிக்கியுள்ளது.
எயார்பஸ் ஏ321 ரக விமானமே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.
விமானத்தின் விமான ஆசனப் பட்டிகளை அணியுமாறு பயணிகளுக்கு விமானி அறிவுறுத்தி சில நிமிடங்களில் விமானம் திடீரென கீழிறங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விமானப் பணிப்பெண்ணாக இணைந்து கொண்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் குறித்த பெண் இந்த விபத்தினை எதிர்கொண்டுள்ளார்.
குறித்த பெண் காற்றுக் கொந்தளிப்பு காரணமாக விமானத்தின் உட்கூரை வரையில் வீசி எறியப்பட்டு பின்னர் விமானத்தின் தரைப் பகுதியில் வீழ்ந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாகவும் அங்கு மேற்கோண்ட பரிசோதனைகளில் குறித்த பெண்ணின் முதுகெலும்பு முறிந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
1979ம் ஆண்டில் ஆட்லாண்டிக் கடற்பரப்பில் 17.7 மணித்தியாலங்கள் காற்றுக் கொந்தளிப்பு நிலைமை காணப்பட்டதாகவும் 2023ம் ஆண்டில் இது 27.4 மணித்தியாலங்களாக அதிகரித்துள்ளதாகவும் பிரித்தானியாவின் லீடி; பல்கலைக்கழகம் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளது.
சில காற்றுக் கொந்தளிப்பு நிலைமகளைஇலகுவல் அடையாளம் காண முடியும் என்ற போதிலும் சிலவற்றை அடையாளம் காண முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.