சுவிட்சர்லாந்தின் ஜெனீவா கான்டனில் இளையோருக்கு இலவச போக்குவரத்து சேவை வசதியை வழங்க உள்ளது.
24 வயதான இளைஞர் யுவதிகளுக்கு இவ்வாறு இலவசமாக போக்குவரத்து செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவா கான்டன் நாடாளுமன்றில் இரண்டு தடவைகள் இந்த யோசனை முன்வைக்கப்பட்டு தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் கடந்த வியாழக்கிழமை ஜெனீவா கான்டன் நாடாளுமன்றில் இது குறித்த யோசனை முன்வைக்கப்பட்ட போது ஆதரவாக 64 வாக்குகளும் எதிராக 34 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
ஜெனீவா கான்டனில் போதிய வருமானமின்ற கல்வி கற்கும் இளைஞர் யுவதிகள் இந்த இலவச போக்குவரத்து வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரேஸ்ட பிரஜைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் பொதுப் போக்குவரத்து சேவைகளில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக போக்குவரத்து பருவகால சீட்டில் 50 வீத விலைக் கழிவு வழங்கப்பட உள்ளது.
மத்திய வகுப்பைச் சேர்ந்தவர்கள் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதனை ஊக்குவிக்கும் வகையில் இந்த புதிய நடைறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.