சுவிட்சர்லாந்தில் மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது சுவிட்சர்லாந்தின் மருந்துப் பொருள் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது சுவிட்சர்லாந்தின் மருந்துப் பொருள் விலைகள் 8.9 வீதமாக உயர்வடைந்துள்ளது.
ஓராண்டுக்கு முன்னதாக இந்த வித்தியாசம் 5.4 வீதமாக காணப்பட்டது.
சுவிட்சர்லாந்தில் தொடர்ச்சியாக மருந்துப் பொருள் விலைகள் அதிகரித்துச் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐரோப்பிய மருந்துப் பொருட்களின் விலைகளுடன் ஒப்பீடு செய்யும் போது சுவிட்சர்லாந்தில் ஆண்டு ஒன்றுக்கு செலவிடப்படும் மருந்துச் செலவுகள் 1.3 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் அதிகமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.