சுவிட்சர்லாந்தில் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.
பேசல் கான்டனின் ரிஹின் நிதியும், கிழக்கு சுவிட்சர்லாந்தின் துர்காவ் கான்டனின் தூர் நதி என்பன பெருக்கெடுத்து ஓடும் அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் வடக்கு மலைப் பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரிஹின் மற்றும் தூர் ஆகிய நதிகள் பெருக்கெடுப்பு தொடர்பிலான மூன்றாம் நிலை அபாயத்தை கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சூரிச்சில் வீதிகளில் வெள்ளம் பெருக்ககெடுத்த காரணமாக இன்றைய தினம் 200 தடவைகள் தீயணைப்புப் படையினருக்கு அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஜெர்மனியிலும் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.