இந்தியாவின் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டக் கூடிய வாய்ப்பு யாருக்கு உண்டு என்பது குறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்தக் கருத்துக்கணிப்பில் மோடி மீண்டும் பிரதமராகும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜூன் 4ஆம் திகதி தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது,
வாக்கெடுப்பின் பின்னர் பாரியளவிலான கருத்துக் கணிப்பு ஒன்று நாடு தழுவியரீதியில் நடைபெற்றுள்ளது.
நாட்டின் 21 பிரதான மாநிலங்களில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பில், நாடு தழுவிய அளவில் பாஜக அதிக இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாஜகவுக்கு 355 முதல் 370 இடங்கள் வரை கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணிக்கு 125 முதல் 140 இடங்கள் வரை கிடைக்கலாம் எனவும், நாடு முழுவதும் பிற கட்சிகளுக்கு 42 முதல் 52 இடங்கள் வரை கிடைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 1.4 பில்லியன் மக்கள் சனத்தொகை காணப்படுவதுடன் இதில் 969 மில்லியன் பிரஜைகள் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.