சுவிட்சர்லந்து அரசாங்கம், ஈராக்கில் மீண்டும் தூதரகம் திறக்க தீர்மானித்துள்ளது.
சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்துள்ள ஈராக்கிய வெளிவிவகார அமைச்சர் பவுட் ஹுசெய்ன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாதங்களில் ஈராக்கின் பக்தாத் நகரில் சுவிஸ் தூதரகம் நிறுவப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த பத்தாண்டுகளாக தூதரகம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈராக்கிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட கலைப் பொக்கிசங்களை அண்மையில் சுவிஸ் அரசாங்கம் அதிகாரபூர்வமாக ஒப்படைத்திருந்தது.