இலங்கையில் சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் காலநிலை சீர்கேடு காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட பல்வேறு அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன.
அனர்த்தங்களினால் பதினான்கு பேர் பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக சிலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காலநிலை சீர்கேடு காரணமாக நாளைய தினம் பாடசாலைகள் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மழை வெள்ளம் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
எஹலியகொட பிரதேசத்தில் 400 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.