சுவிட்சர்லாந்தில் நிலவி வந்த வெள்ள அபாயம் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து அரசாங்கம் இது தொடர்பிலான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
கிழக்கு சுவிட்சர்லாந்து பகுதியில் கடுமையான மழை காரணமாக நதியோரங்களில் வெள்ள அபாயம் காணப்பட்டதுடன் சில வீதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருந்தது.
எனினும் இன்று மதியமளவில் வெள்ள அபாயம் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Vitznau LU பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு நிலைமையும் தற்பொழுது குறைந்துள்ளதாகவும் அந்தப் பகுதியில் தற்பொழுது ஆபத்து கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழை வீழ்ச்சி குறைவடைந்த காரணத்தினால் அநேகமான நதிகளின் நீர் மட்டம் குறைவடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.